திருச்சி – ரூ. 50 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா 2-வது அலை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதை தடுக்க 24-ந் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கு விதியை மீறி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள், குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடையை நடத்தியவர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த 8-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 26, 500 வழக்குகள் பதிவு செய்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 1, 400 வழக்குகள் பதிவு செய்தும், கட்டுப்பாட்டை மீறிகடையை நடத்தியவர்கள் மீதும் 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்தும் இதுவரை ரூ. 50 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *