கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை: மத்திய அரசு

கோவிட் சிகிச்சை நெறிமுறையிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை மத்திய அரசு கைவிட்டது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை தானமாக பெற்று, அதாவது அவர்கள் உடலில் இருக்கும் ஆண்டிபாடிகளை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எய்ம்ஸ், ஐசிஎம்ஆர்-கோவிட்-19 தேசிய பணிக்குழு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்புக் குழு ஆகியவற்றின் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது எந்த வகையில் சிறப்பானதாக இருக்கும் என விஞ்ஞான ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதோடு, எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பதற்கும் ஆதாரம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது

நோயில் கோவிட்-19 ஆன்டிபாடிகள் குணமடைந்த நோயாளியின் இரத்தத்தில் இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு மாற்றப்படுவது அடங்கும்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *