சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18

சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அருங்காட்சியகங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும் அதே போல இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச அருங்காட்சியக தினம் 1977ஆம் ஆண்டு முதல் உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது.

நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன.

உலகளவில் சமூகத்தின் வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இதற்கான கருப்பொருள் இதன் ஆலோசனைக்குழுவினால் தீர்மானிக்கப்படும்.2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் ‘அருங்காட்சியகங்களின் எதிர்காலம்: மீட்டெடு மற்றும் மறுகற்பனை’ ஆகும்.

உலகின் சிறந்த அருங்காட்சியகங்களில் பாரிஸில் உள்ள லூவர் அடங்கும்.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *