ஆரம்பித்தது கொரோன 3ம் அலை

தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் 3 அலை பரவதொடங்கியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் டேவிட் மக்குரா தெரிவித்துள்ளார்.

தொற்று பாதிப்பு கடந்த 4 நாட்களில் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய அவர் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்‍க நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசக்‍கு பரிந்துரை செய்துள்ளனர்.

இரண்டாம் அலை முழு வீச்சில் பரவி வரும் நிலையில், 3-வது அலை ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக எய்ம்ஸ் இயக்‍குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு போன்றவற்றால் எவ்வித பயனும் இருக்‍காது என்றும், முழு ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என அவர் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *