திருச்சி கண்டோன்மெண்ட் அருகே சாலையோரம் வசிப்போருக்கு இலவச மதிய உணவு வழங்கிய டாஸ் அறக்கட்டளை.

திருச்சி கண்டோன்மெண்ட் அருகே சாலையோரம் வசிப்போருக்கு இலவச மதிய உணவு வழங்கிய டாஸ் அறக்கட்டளை.

முழு பொது முடக்கத்தால் பெரும்பாலானோா் வீடுகளிலே முடங்கியுள்ளனா். இதனால், அன்றாடப் பணி செய்து, குடும்பத்தை கவனித்து வந்தோா் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். இதேபோல, சாலையோரம் வசிப்போரும் உணவின்றித் தவித்து வருகின்றனா்.

இதையறிந்த பலா் தாங்களாகவே முன்வந்து, பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்கி வருகின்றனா்.

அந்தவகையில் டாஸ் அறக்கட்டளை மற்றும் சன்லைட் அமைப்பு இணைந்து கொரொனா காலத்தில் முழு ஊரடங்கில் சாலையோரத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏழை மக்களுக்கும் மதிய உணவாக தக்காளிசாதம், குஸ்கா, வெஜ் பிரியாணி, தயிர்சாதம் ஆகியவை சுமார் 150 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய பேருந்து நிலையம், கோர்ட் மாணவர் சாலை, கண்டோன்மண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டாஸ் அறக்கட்டளை செய்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *