உலக அழகி பட்டத்தை மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா வென்றுள்ளார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைப்பெற்ற 2021 ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெசா வென்றுள்ளார். இவருக்கு வயது 26 . மெக்சிகோவின் சார்பாக உலக அழகி பட்டம் பெறும் 3 வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியானது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மிகுந்த பாதுகாப்புடனும் நடத்தப்பட்டது. இதில் 74 நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

பிரேசில் நாட்டுப் பெண் ஜூலியா காமா 2-வது இடத்தையும், பெரு நாட்டைச் சேர்ந்த ஜானிக் மெக்டா (27) 3-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *