இரவு நேர விமான சேவை ரத்து

திருச்சி – சென்னை இடையே இன்று இரவு நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது .

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளில் பெங்களூரு மற்றும் சென்னைக்கு மட்டும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இன்று ( வெள்ளிக்கிழமை ) இரவு 9.15 மணிக்கு திருச்சிக்கு வந்து சென்னை செல்லும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாகவும் , காலை மற்றும் மதிய நேர விமான சேவை மற்றும் பெங்களூருவுக்கு மாலை நேர சேவையும் வழக்கம் போல் இயங்கும் என்று விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *