நாளை முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் !

காய்கறி , மளிகை , பலசரக்கு , மீன் இறைச்சி கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

நாளை முதல் ” டீ ” கடைகள் இயங்க அனுமதி இல்லை.

இ – பதிவு முறை 17 ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது . திருமணம் முக்கிய உறவினர்களின் இழப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் முதியவர்களுக்கான தேவை ஆகியவற்றுக்கு இ -பதிவு கட்டாயம் https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.

ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதி.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

அடுத்து வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எந்தவித கடைகளை திறக்க அனுமதி இல்லை

ஏடிஎம் , பெட்ரோல் டீசல் பங்குகள் எப்போதும்போல இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *