வீட்டிலிருந்தே உதவிக்கரம் கொடுப்போம் / திருச்சிராப்பள்ளி

கொரோனாவிற்கு எதிராக கைகோர்ப்போம்

இன்றைய சூழலில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பை கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல என்பதை உணரமுடிகிறது. பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான குடும்பங்கள் சமைக்க இயலாத காரணத்தால் சுகாதாரமான உணவை பெறுவதில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே அவ்வாறான மக்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக இந்த முயற்சியை துவங்கியுள்ளோம். ஆனால் நாம் அனைவரும் இனைந்து முயன்றால் தான் இதன் முழு வெற்றியை காண இயலும். எனவே கீழே உள்ளவற்றில் தங்களால் முடிந்த பகுதிகளில் இணைந்து தங்கள் உதவியை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 • தினம்தோறும் நீங்கள் சமைக்கும் உணவோடு குறைந்தது ஒரு நபருக்கு கூடுதலாக சமைத்து தர இயலும் எனில் கீழே உள்ள இணைப்பில் தங்கள் விவரங்களை குறிப்பிடவும். எங்களின் சமூக ஆர்வலர்கள் அந்த உணவை நீங்கள் இருக்கும் இடத்திலேயே வந்து பெற்றுக் கொள்வார்கள்.

https://forms.gle/kiyM7njcyLqSUwKq7

 • சமூக ஆர்வலர்களால் சமைத்து கொடுக்கப்படும் உணவை பெருந்தொற்று தனிமைப்படுத்துதலில் உள்ள நபர்களுக்கு கொண்டு சேர்க்க இயலும் எனில் கீழே உள்ள பதிவில் தங்கள் விவரங்களை குறிப்பிடவும்

https://forms.gle/LjKbDWx2VhWb4fJA8

 • பெருந்தொற்று தனிமைப்படுத்துதலில் உள்ள உங்களுக்கு உணவு தேவைப்படும் எனில் கீழே உள்ள பதிவில் தங்கள் விவரங்களை குறிப்பிடவும்.

https://forms.gle/XqRMotn3oDnGetAQ9

மேலும் பதிவுகளுக்கு : https://bit.ly/3uxHCS9

உங்களின் உதவிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பெருந்தொற்று காலத்தில் நீங்கள் செய்யும் சிறு முயற்சியும் பெரும் உதவியாக அமையும்.

*மேலும் விவரங்களுக்கு, *

Email- better2gether.trichy@gmail.com

Instagram – @prathiya_balamurugan

         @better2gether.trichy

இத்தகவலை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது மேலும் உதவியாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *