சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரர்கள்….

சர்வதேச தடகள போட்டியில் திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை.

நேபாள நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

நேபாள நாட்டில் சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான கபாடி மற்றும் தடகள விளையாட்டு போட்டி கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெற்றது.

இதில் திருச்சி மணப்பாறையை சேர்ந்த வீரர்கள் சரவணகுமார்,வினோதனி 1,500 மீட்டர் ஓட்டபந்தயத்தில் தங்கம் வென்று திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதைபோல் கபாடி போட்டியில் கலந்து கொண்ட அருண் மற்றும் குழுவினர் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்கள் கடந்த 24ம் தேதி திருச்சியில் இருந்து ரயில் மூலமாக புறப்பட்டு சென்றார்கள் அவர்களை ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் வாழ்த்தி நண்பர்கள் வழியனுப்பி வைத்தனர் என்பது.

முன்னதாக இந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள நேபாள நாட்டிற்கு செல்வதற்கான செலவுத் தொகை இல்லாமல் உதவி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், ஆப்பிள் மில்லட் உணவக உரிமையாளருமான வீரசக்தி இவர்கள் போட்டியில் கலந்து கொள்ள உதவி செய்து வழியனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *