98.6 டிகிரிக்கு மேல் இருந்தால் அனுமதி இல்லை.

98.6க்கும் மேல் இருந்தால் திருச்சி வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதி இல்லை…

திருச்சி ஜமால் முகமது கல்லுாரியில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இதே போல பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லுாரியில் ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும், மண்ணச்சநல்லுார் இனாம் சமயபுரம் கே.இராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில் லால்குடி, மண்ணச்சநல்லுார் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும், துறையூர் கன்னனுார் இமயம் பொறியியல் கல்லுாரியில் முசிறி, துறையூர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

மின்னணு எந்திர வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகளும், தபால் வாக்கு எண்ணுவதற்கு 4 மேஜைகள் என 9 தொகுதிகளுக்கும் போடப்பட்டிருக்கும். இந்த வாக்கு எண்ணும் பணியில் திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பிற்கான காவல்துறையினர் என 3562 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது

வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் 2352 பேர் கலந்து கொள்ள உள்ளனர். 8 மணிக்கு முதலில் தபால் வாக்கும், 8.30 மணி முதல் மின்னணு வாக்கு பதிவும் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும். இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம் வாயிலாக 2111 வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கும், 1430 வாக்கு எண்ணும் மைய அலுவலர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

கொரோனா நெகடிவ் சர்ட்டிபிகேட் இருந்தாலும் உடல்நிலை வெப்பமானது 98.6 டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *