திருச்சி பாலக்கரை அருகே திடீரென இடிந்து விழுந்தது வீட்டின் மேற்கூரை ; 3 பேர் உயிர் தப்பினர்.

திருச்சி பாலக்கரை அருகே திடீரென இடிந்து விழுந்தது வீட்டின் மேற்கூரை ; 3 பேர் உயிர் தப்பினர்.

திருச்சி பாலக்கரை பிள்ளைமாந ரை சேர்ந்தவர் மரியசூசை நாதன்(72) இவரது மனைவி சவரியம்மாள் (65) மற்றும் பேரன் ஜான்சன் (26) ஆகியோருடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மாலை மரிய சூசைநாதன் மற்றும் அவரது மனைவி வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

வீட்டிற்குள் ஜான்சன் தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீரென மண் தன்மீது கொட்டுவதை போல் உணர்ந்து வெளியில் ஓடி வந்துள்ளார்.

அந்த சமயத்தில் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து வீட்டிற்குள்ளேயே விழுந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ஜான்சன் வெளியில் ஓடி வந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள கூடினர்.

இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டில் இருந்த ஐசக் (42) என்பவர் வெளியில் ஓடி வரும் போது தடுமாறி கீழே விழுந்ததில் மண்டை உடைந்து. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *