இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

பாவேந்தர் பாரதிதாசன் 131 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பதிவாளர் முனைவர் கோபிநாத், தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன், இந்திரா கணேசன் கல்வி குழும தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் தொடர்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பில் கொரொனா பெருந்தொற்றிற்கு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார் செயலாளர் ஜவஹர் ஹசன், இணைச்செயலாளர் எழில் ஏழுமலை, மருத்துவ குழு தலைவர் இளங்கோவன், மண்டல ஒருங்கிணைப்பாளரும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத்ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான வெற்றிவேல், வழிகாட்டு குழு உறுப்பினர்கள் குணசேகரன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

மக்களுக்கு வைரஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவுகின்றது.காய்ச்சல் உள்ளவர்களுக்கு அதிக காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத் திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளவர்கள் அவசியம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கவும், குணமாக்கவும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீரானது நிலவேம்பு ,ஆடாதொடை, சீந்தில் கொடி, கற்பூரவள்ளி, திப்பிலி ,அக்ரகாரம், கோரைக்கிழங்கு, கோஷ்டம், கடுக்காய்த் தோல், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி உள்ளிட்ட 15 மூலிகைகள் சேர்ந்து கபசுர குடிநீர் பொடி அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் வழங்கப்படுகின்றது. 5 கிராம் கபசுர குடிநீர் பொடியினை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாகச் சுருக்கி காலை, மாலை அருந்தினால் காய்ச்சல் குணமாகும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும் இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டை கொண்டு மூக்கு வாயை மூடிக்கொள்ள வேண்டும் சாப்பிடும் முன் கைகளை கிருமிநாசினி திரவம் கொண்டு நன்றாக கழுவ வேண்டும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து மருத்துவரை பார்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சி மாவட்ட கிளை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *