அனாதை பெண் சடலம் நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்.

திருச்சி ஏப்ரல்27.
திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஆவின் தேனீர் கடை அருகில் 19- 4-2001 அன்று காலை 9-10 மணியளவில் பெயர் விலாசம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க அனாதை பெண் சடலம் அரசு மருத்துவமனையின் சுகாதார பணியாளர் சக்திவேல் மூலமாக கொண்டுவரப்பட்டு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

(Cr.No 255/2021Us 174Cr.Pc as on 26-4-2021) திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை E3 காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரும் அரசு மருத்துவமனை சட்ட ஒழுங்கு காவல் நிலைய பொறுப்பு அலுவலர் கீதா இருந்தபோது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை இருக்கை மருத்துவர் சாக்ரடீஸ் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் மேற்படி நபர் பெயர் விலாசம் தெரியாதவர் என்பது தெரியவந்தது. இதனடிப்படையில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை E3 காவல் நிலைய தலைமை காவலர் ஆனந்த் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாஆசிரியர் விஜயகுமாருக்கு நல்லடக்கம் செய்ய தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் திருச்சி அண்ணாநகர் குமிலிகரை மயானத்தில் தலைமை காவலர் ஆனந்துடன் 27-4-2021 அன்று காலை  இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *