திருச்சி கருமண்டபம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை

திருச்சி கருமண்டபம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை

திருச்சி கருமண்டபம் ஜெயா நகரில் வசிக்கும் முகமது ஜயீத் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் திருச்சிக்கு வந்தார்.

இந்நிலையில் தனது மூத்த மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்று சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவை உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தனர் வீட்டில் உள்ள 40 பவுனுக்கு மேலாக காணவில்லை மேலும் லட்சக்கணக்கான பணமும் காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *