கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற திருமணம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற திருமணம்.

தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு திருமண நிகழ்வுகளில் 100 போ் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 போ் மட்டுமே பங்கேற்க அனுமதித்து மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 22, 25, 26, 29 ஆகிய நாள்கள் சுப முகூா்த்த தினங்களாகும். இதில், வளா்பிறையில் வரும் சுபமுகூா்த்த தினமான ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்தோா் அச்சமடைந்தனா்.

இருப்பினும், கட்டுப்பாடுகளுடன் திருமணத்தை நடத்த அரசு அனுமதித்ததால் திட்டமிட்டபடியே திருமணங்களை நடத்தினா். திருவானைக்கா பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் மணமகன், மணமகள் வீட்டாரைத் தவிா்த்து 50 போ் மட்டுமே பங்கேற்றனா். அனைவருக்கும் கைகளை சுத்தம் செய்யும் திரவம், முகக் கவசம் வழங்கப்பட்டு திருமண மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

புகைப்படமெடுக்கும் நேரத்தைத் தவிா்த்து இதர தருணங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்தினா். திருச்சி, திருவானைக்கா மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு திருமண மண்டபங்களிலும் ஞாயிற்றுக்கிழமை திருமணங்கள் நடைபெற்றன. கோயில்களிலும், பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *