இரவு நேரத்தில் வீடியோ எடுக்க அனுமதிக்க கோரி திருச்சி கேமிராமேன்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

இரவு நேரத்தில் வீடியோ எடுக்க அனுமதிக்க கோரி திருச்சி கேமிராமேன்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வீடியோ மற்றும் போட்டோ ஔிப்பதிவாளர்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அவற்றில் கூறியதாவது… திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோ ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். எங்களது வாழ்வாதாரமே முகூர்த்த தினங்களில் நடக்கும் திருமணம் மட்டும் தான். மேலும் பொது நிகழ்வுகளை நம்பிதான் பெரும்பாலான முகூர்த்த தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 10.00 மணிக்கு மேலும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துவிட்டு வரும் கலைஞர்களை அனுமதிக்க வேண்டும் என இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு தலைவர் நிக்சன் சகாயராஜ், செயலாளர் ராஜாராம் பொருளாளர் ஜீவானந்தம் துணைத் தலைவர்கள் கென்னடி ஜூல்ஃபி அகமத் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *