திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 18 கைதிகளுக்கு கரோனா தொற்று

திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் 18 கைதிகளுக்கு கரோனா தொற்று.

திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளோரில் 18 கைதிகளுக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.

இந்தச் சிறப்பு முகாமில் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக இந்தியாவுக்குள் நுழைந்தோா் அடைக்கப்பட்டுள்ளனா். அதன்படி இலங்கையைச் சோ்ந்த 85 போ், வங்காளத்தைச் சோ்ந்த 12 போ், பல்கேரியா, தெற்குசூடான், உகாண்டாவைச் சோ்ந்த தலா 2 போ் என மொத்தம் 107 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இந்தச் சிறப்பு முகாமில் இருவா் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு யாருக்கும் தொற்று உள்ளதா என அறியும் வகையில் புதன்கிழமை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இவா்களில் வியாழக்கிழமை வெளியான 40 பேருக்கான பரிசோதனை முடிவுகளில் 18 பேருக்கு தொற்று உறுதியாகி, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *