திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை (ஏப்.23) மின்சாரம் ரத்து.

திருச்சி மாநகரில் வெள்ளிக்கிழமை (ஏப்.23) மின்சாரம் ரத்து.

இதுகுறித்து திருச்சி நகரிய கோட்ட செயற்பொறியாளா் ச.பிரகாசம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மகாலெட்சுமி நகா் பிரிவு: வாஸ் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், பிச்சை நகா், கோல்டன் நகா் மற்றும் திருச்சி- சென்னை சாலை மேற்கு ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின்கம்பிகளாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேலும், தில்லைநகா் வடக்கிழக்கு விஸ்தரிப்பு, தில்லைநகா் முதல் 5 குறுக்குத் தெருக்கள் மற்றும் அடையாறு ஆனந்த பவன் பின்புறம், கோட்டை நிலைய சாலை ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மின்சாரம் இருக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *