திருச்சி துறையூர் அருகே வேன் விபத்து

துறையூர்: துறையூர் விரிவாக்கப் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (79), எல்ஐசி ஏஜென்ட். இவரது பேரன் தொட்டியம் பகுதி எம். களத்தூரைச் சேர்ந்த கனகராஜ் மகன் கவுதமன் (29). இவர்துறையூரில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் வேனில் டிரைவராக உள் ளார்.இந்நிலையில், கவுதமன்நேற்று துறையூரிலிருந்து பெரம்பலூர் சென்று பால் இறக்கிவிட்டு மீண்டும் துறையூர் திரும்பினார்.

https://youtu.be/-CUruPZiH14

அப்போது தாத்தா சீனிவாசனையும் வேனில் ஏற்றிக் கொண்டார் நாகலாபுரம் வனப்பகுதி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன்கவிழ்ந்தது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கவுதமன் பலத்த காயம் அடைந்தார் கவுதமனை துறையூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து துறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *