த.பேட்டை அருகே வறுமை வாட்டியதால் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தா.பேட்டை அருகே வறுமை வாட்டியதால் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கண்ணனூர் வடக்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75). கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சின்னம்மாள் (70). இவர்களின் மகன் மனோஜ்.

லாரி டிரைவரான அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே தனியாக வசித்து வருகிறார். அதன் அருகே வயதான தம்பதியான செல்வராஜும், சின்னம்மாளும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

 

மேலும் தனது வீட்டின் அருகே செல்வராஜ் டீக்கடை வைத்து இருந்தார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வறுமையில் வாடினர். இது ஒருபுறம் இருக்க செல்வராஜ்-சின்னம்மாள் தம்பதிக்கு வயதாகி விட்டதால், திடீர் உடல்நலக்குறைவு, உடல் சோர்வு என்று முதுமை அவர்களை மற்றொரு புறம் வாட்டியது.

 

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்த தம்பதியினர், வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்கள்.

பின்னர், அந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வயதான காலத்தில் சாவிலும், இணைபிரியாத தம்பதியின் உடலை பார்த்து உறவினர்கள் கண்கலங்கி நின்றது சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *