பள்ளிவாசல்கள் இரவு 11 மணி வரை திறந்திருக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம்
தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இரவு நேர தொழுகை நேரத்தை இரவு 11 மணி வரை பள்ளிவாசல்களை திறந்திருக்க அனுமதி வேண்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தமுமுக சார்பாக திருச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *