திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை..

மிகவும் பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட்டில் அங்கு 348 காய்கறி கடைகள் 79 பூக்கடைகள் 108 மளிகை கடைகள் 28 பழக்கடைகள் 62 இறைச்சி கடைகள் 62 மீன் கடைகள் 65 ஸ்டால்கள் என மொத்தம் 1320 கடைகள் இயங்கி வருகின்றன. குரானா காரணமாக கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் மூடப்பட்டது.
அதன் பின் நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது

இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக மீண்டும் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த கூட்டம் திருச்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில்  நடைபெற்றது இந்த கூட்டத்தில் 27 சங்கங்களை சேர்ந்த வியாபார நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் அரசு தரப்பில் சில்லறை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை என்றும் சில்லறை வியாபாரம் தென்னூர் உழவர் சந்தை மற்றும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *