பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால்…. ரூ.200 அபராதம்…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

புதுச்சேரியில் முக கவசம் அணியாவிட்டால் ஒரு 100 விதிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார் , கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் புதுச்சேரியிலும்  துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *