அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்யும் பெண் வழக்கறிஞர்க்கு சாதனையாளர் விருது

கண்மலை அறக்கட்டளை, திருச்சிராப்பள்ளி இன்னர் வீல் சங்கம் சார்பில் மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திருச்சிராப்பள்ளி இன்னர் வீல் சங்கம் தலைவர் உஷா குமார் செயலாளர் ஜெயஸ்ரீ நடராஜன் மருத்துவர் ஷர்மிளா மதுரம் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் முருகேஸ்வரி ஹெலன் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருபவர்களுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கினர்.

அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் பெண் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் திருச்சிராப்பள்ளி கோஅபிஷேகபுரம் கோட்டம் புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலம் அனாதைப் பிணங்களை தனது கணவர் யோகா ஆசிரியர் விஜயகுமாரூடன் இணைந்து வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் சகிதமாக ஈமச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வருகிறார்கள்.

யோகா ஆசிரியர் விஜயகுமார் எழுத்தாளர், பழம்பொருள் சேகரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்டவர். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார். திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியினை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *