இந்திய ராணுவ வீரர் அல்ட்ரா மராத்தான் 4300 கி.மீ

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டி இந்திய ராணுவ வீரர் நாயக் வேலு காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை அல்ட்ரா மராத்தான் ஓட தொடங்கியுள்ளார்.

இந்த சாதனையை ஏப்ரல் 1 அன்று ஸ்ரீநகரில் உள்ள 92 பேஸ் மருத்துவமனையிலிருந்து தொடங்கினார் நாயக் வேலு.

நாயக் வேலு ஒரு நாளைக்கு 70-100 கி.மீ வேகத்தில் ஓடி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான 4300 கி.மீ தூரத்தை 50 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று இந்த புதிய சாதனையை உருவாக்க தீர்மானித்தார்.

அவர் “சுத்தமான இந்தியா-பசுமை இந்தியா” என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஓட்டத்தை தொடங்கியுள்ளார் , நாயக் வேலு ஏற்கனவே இந்தியா முழுவதும் நடந்த பல அல்ட்ரா மராத்தான்கள், டஃப்மேன் பந்தயம் போன்ற போட்டிகளில் பங்குபெற்று வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *