இந்தியாவில் ஒரே நாளில் 714- பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில மாதங்கள் இல்லாத அளவுக்கு ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 89 ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 714- பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

முந்தைய நாளில் 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 8 ஆயிரம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 58 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 714 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *