திருச்சி கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறை, சுற்றுசூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் ஆண்டு நிறைவு விழா

திருச்சி கே. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் வேதியியல் துறை, சுற்றுசூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் ஆண்டு நிறைவு விழா 31. 03. 2021 ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த அமைப்பின் உறுப்பினர்கள் மட்டும் விழாவில் பங்கு கொண்டனர்.

கல்லூரி நிர்வாகத்தின் பரிந்துரையினாலும், உதவியினாலும் “இன்ஸ்டிடியூட் ஆப் கிரீன் இன்ஜினியர்ஸ்” என்ற Organization நடத்திய Sustainable development 13 காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ள, கல்லூரி முதல்வரின் அனுமதியோடு வேதியியல் துறையின் தலைவர் திருமதி. M. தாமரை செல்வி அவர்களும் 32 மாணவர்களும் இணைந்து இவ்விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடர்ந்து 99 நாட்கள் மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

இப்போட்டிகளின் 99 நாள் நிகழ்ச்சித் தொகுப்பும் காணொளி வடிவில் திரையிடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர். திரு. சீனிவாசன் தேவராசு அவர்கள் தலைமையுரை ஆற்றி விழாவைத் துவங்கி வைத்தார். எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர்&தலைவர் திரு. P. மோகன் அவர்கள் சிறப்புரை ஆற்றி தேர்தல் மற்றும் ஓட்டுப்பதிவு குறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்தார். மேலும் 1௦௦% வாக்குப்பதிவுக்கான தேர்தல் உறுதிமொழியையும் இவ்விழாவில் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் எடுத்துக்கொண்டனர். மேலும் “பசுமை திருவிழா” போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.

வேதியியல் துறை, சுற்றுசூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் இந்த 99 நாள் சாதனைகளைப் பாராட்டிய கல்லூரி முதல்வரும், சிறப்பு விருந்தினரும் வேதியியல் துறையின் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு சான்றிதழ்களை வழங்கினர். மேலும் இவ்விழாவில் கே. ராமகிருஷ்ணன் கல்லூரியின் வேதியியல் துறைக்கும் குன்னூர் ப்ரொவிடன்ஸ் கல்லூரியின் வேதியியல் துறைக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும்(MOU), Youth Exnora International அமைப்போடு மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MOU) கையெழுத்தானது.

எந்த கல்லூரியிலும் இல்லாத அளவில், இந்த கொரானா காலக்கட்டத்திலும் “இணைய வழி” என்ற தொழில்நுட்பத்தின் உதவியை முழுவதும் பயன்படுத்தி 250 மரக்கன்றுகள், 4 வினாடி-வினா, 7 இணையவழி கருத்தரங்குகள், மொட்டை மாடி தோட்டம், இயற்கை உரம், இயற்கை வேளாண்மை, தென்னை நார் திட்டம், 21 மற்ற போட்டிகள் மற்றும் எம் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் என மொத்தம் 150 க்கும் மேற்பட்ட போட்டிகளையும் 3000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் வழங்கி மிகப்பெரிய சாதனையை செய்த வேதியியல் துறை, சுற்றுசூழலியல் குழு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் மாணவர்களையும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும் அனைவரும் பாராட்டினார்கள்.

நிறைவு விழாவிற்கு வந்திருந்த பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விழாவை சிறப்பாக செய்திருந்த கல்லூரி நிர்வாகத்திற்கும், வேதியியல் துறைக்கும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்ததோடு விழாவில் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்கள். இவ்வாறாக அனைவரின் வாழ்த்துக்களோடும், நன்றிகளோடும் இந்நிறைவு விழா இனிதாய் நிறைவேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *