COVID-19 – ஹாக்கி சாம்பியன்ஷிப் ஒத்திவைப்பு
ஜார்கண்டின் சிம்டேகா மாவட்டத்தில் ஏப்ரல் 3 முதல் தொடங்க திட்டமிடப்பட்ட தேசிய ஜூனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 11 வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர்க்கு COVID-19 தொற்று, இருப்பதை கண்டறிந்துள்ளனர் .
ஜார்கண்ட் அணியின் ஆறு வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்க்கும் மற்றும் சண்டிகர் அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கும் கோவிட் பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மற்றும் சண்டிகர் அணியின் COVID-19 பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் உடன் ஆன்லைன் மூலம் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்கள் நல்வாழ்வு மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் பெறப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் ஆஸ்ட்ரோடர்ப் ஸ்டேடியம் COVID கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அது சுத்திகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட வீரர்களுடன் தொடர்பு கொண்ட நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.