தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு அனல் காற்று.
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என அறிவித்துள்ளது. அதாவது இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை கடுமையான அனல் காற்று வீசும் என்றும் அதனால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் 4 மணி மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை வேலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்றும் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.