இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் செல்லும்

கடந்த ஆண்டு ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த இணைக்கப்பட்ட வங்கிகளின் பழைய காசோலைகள் (Cheque) செல்லாது என அறிவிக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறு தகவல் ஒன்று வெளியானது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்தனர்.

ஆனால் தற்போது வங்கி தரப்பில், பழைய காசோலைகள் நிறுத்தப்படாது, அதற்கு கால அவகாசம் வழங்கப்படும். அதாவது இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்குப் பிறகும் செல்லும். அதே சமயம் புதிய காசோலைகளையும் அவசியம் பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *