ஹீரோவாக நடிகர் வடிவேலு….

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் காமெடி நடிகராக திகழ்பவர் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி, எலி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து புகழ்பெற்ற வடிவேலு சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக ஒரு காமெடி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு “நாய் சேகர்” என பெயரிட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *