திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்..

Iதிருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (வயது-26), முத்துலட்சுமி (வயது-22) என்கிற காதல் ஜோடி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் மாலையும் கழுத்துமாக வந்து நின்று தங்களை காப்பாற்றுமாறும், நாங்கள் இருவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகிறோம்.

ஆனால் எங்கள் வீட்டில் தினேஷ் பாபு வேறு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவரை ஏற்க மறுக்கின்றனர்.

நாங்கள் திருமணம் செய்து கொண்டதை ஏற்க மறுக்கும் எங்களது பெற்றோர்களால் எங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து இருக்கின்றது என்று கூறி புகார் அளித்துள்ளனர் காதல் ஜோடிகள்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *