திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு

திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் குழாய் உடைப்பு குடிதண்ணீர் சாலையில் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதே போல் இன்று காலையும் அந்த பகுதியில் குடிநீர் பொதுமக்கள் விநியோகிப்பதற்காக விடப்பட்ட பொழுது குடிநீர் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் காட்டாற்று வெள்ளம் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் நடந்து செல்லக்கூடிய பொதுமக்கள் உட்பட அனைவரும் இதனால் தினமும் பாதிக்கப்படுகிறார்கள்.

பின்னர் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது;-தினமும் காலையில் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகின்ற பொழுது பழுதடைந்த தண்ணீர் குழாயில் இருந்து உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிதண்ணீர் வீணாகி செல்கிறது. அதைத்தொடர்ந்து இந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு எத்தனையோ முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் அதிருப்தியில் இருக்கிறோம்.

மேலும் இந்த குடிநீர் குழாயின் உடைப்பின் மூலம் வெளியேறுகின்ற குடிநீர் சாலைகளில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அந்தப் பகுதியில் வசித்து வரும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் மர்ம காய்ச்சல் ஏற்படுகின்றது. ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *