கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் நேரடி வகுப்புகள் ரத்து

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பலருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த நிலையில், தற்போது அனைத்து வகையான கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வாரத்தில் 6 நாள்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *